Home இலங்கை சமூகம் மீன்படி படகொன்றை உலுக்கிய பலத்த காற்று: கடற்றொழிலாளர் மாயம்!

மீன்படி படகொன்றை உலுக்கிய பலத்த காற்று: கடற்றொழிலாளர் மாயம்!

0

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த ஒருவர் வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (19) காலை  இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய படகில் 6 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

விபத்து சம்பவம் 

கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகானது, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version