முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

யாழில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பேரணியானது இன்று(09.02.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு
முன்னால் ஆரம்பமாகி வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்

தமிழர் பகுதியில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 

இதன்போது ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஐந்து அம்சக் கோரிக்கைகள்
அடங்கிய மனு ஒன்று ஆளுநரின் பிரதிச் செயலாளர் அவர்களிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.

யாழில் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி | Fishermen Fulfillment Five Point Demands In Jaffna

அந்த மனுவில்  புதிதாக உருவாக்கப்பட்ட கடற்றொழிலாளர் சட்ட வரைபை நிராகரித்தல், வெளிநாட்டு மீன்கள் இறக்குமதி செய்தலை நிறுத்தல், வெளிநாட்டு படகுகளுக்கு இலங்கை கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது, வெளிநாட்டு படகுகளில் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு நஷ்ட
ஈடு வழங்க கோரல், கடற்றொழிலாழர்களுக்கான வரவு-செலவு திட்டத்தை மீள்பரிசீலிக்க கோரல் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

யாழில் கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி | Fishermen Fulfillment Five Point Demands In Jaffna

இந்த கவனயீர்ப்பு பேரணியில் ஊர்காவற்துறை கடற்றொழில் சமாசத்தின் செயலாளர்
அ.அன்னராசா, கிளிநொச்சி மாவட்ட சமாச தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், முல்லைத்தீவு
மாவட்ட கடற்றொழிலாளர் சமாச தலைவர் எம்.தணிகாசலம், மன்னார் மாவட்ட
கடற்றொழிலாளர் சமாச தலைவர் ராஜா குருஸ், மன்னார் மாவட்ட பிரதேச சமாச தலைவர்,
ஜே.ஜோகராஜ் மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறை: 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென எச்சரிக்கை

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறை: 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமென எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்