Home இலங்கை சமூகம் கடற்றொழிலாளர்களுக்கு ஜனாதிபதி அநுரவின் மகிழ்ச்சியான அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு ஜனாதிபதி அநுரவின் மகிழ்ச்சியான அறிவிப்பு

0

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(anura kumara dissanayake) நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாதந்தோறும் எரிபொருள் மானியம்

இதன் மூலம் நெடுநாள் மற்றும் ஒரு நாள் படகுகளுக்காக எரிபொருள் மானியம் மாதந்தோறும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியம் வைப்பிலிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவு குறையும்

இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலை ஊக்குவிப்பதுடன், உற்பத்தி செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/fishing-communities-provided-with-a-fuel-subsidy-1727368028

NO COMMENTS

Exit mobile version