Home இலங்கை சமூகம் மகாவலி கங்கையின் நீர் மட்ட உயர்வு: மக்கள் உடனடி இடமாற்றம்…!

மகாவலி கங்கையின் நீர் மட்ட உயர்வு: மக்கள் உடனடி இடமாற்றம்…!

0
🛑புதிய இணைப்பு

மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் மூதூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால் சாபிநகர் வேதத்தீவு மற்றும் கங்குவேலி கிராம பொது மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடைத்தங்கல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கையை உதவி பிரதேச செயலாளர், சிரேஷ்ட காவல்துறை பரிசோதகர், மூதூர் காவல்துறை பொறுப்பதிகாரி, நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

🛑 முதலாம் இணைப்பு

மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாவில்லாற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய கனமழையால் மகாவலி கங்கைக்கு பெருமளவு நீர் கிடைக்கப்பெறுவதும் அதனால் மாவில்லாறு நீர்த்தேக்கம் மற்றும் சுரங்கப் பகுதிகளில் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு 

இந்தநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேவையானால் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக நகர்ந்து செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், நிலைமையைப் பற்றி தொடர்ந்தும் கண்காணித்து மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version