Home உலகம் இந்தியாவில் நொடியில் வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளம் – வைரலாகும் காணொளி

இந்தியாவில் நொடியில் வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளம் – வைரலாகும் காணொளி

0

உத்தராகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துயர சம்பவம் நேற்று உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.  

கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குடியிருப்பு வழியாக வெள்ளப்பெருக்கு

இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹர்சிலுக்கு அருகிலுள்ள கீர் காட் பகுதியில் தாராலி கிராமத்தில் ஒரு பெரிய மண்சரிவு ஏற்பட்டது,

இதனால் குடியிருப்பு வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐபெக்ஸ் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சேதத்தின் அளவு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு ஆதரவாக ராணுவம் உறுதியாக நிற்கும்” என்று தெரிவித்தது.

https://www.youtube.com/embed/TWiHEesD3NU

NO COMMENTS

Exit mobile version