கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார்.
ஆண் குழந்தை
இதன்போது, பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
