Home இலங்கை சமூகம் 07ஆம் அறிவு திரைப்படத்தைப் போல இலங்கையில் வெளிநாட்டவர் ஒருவர் செய்த மர்மச் செயல்..

07ஆம் அறிவு திரைப்படத்தைப் போல இலங்கையில் வெளிநாட்டவர் ஒருவர் செய்த மர்மச் செயல்..

0

இலங்கைக்கு வந்த வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணி ஒருவரின் மர்மச் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

கடற்கரையோரங்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ஏதோ ஒரு மருந்தினை ஊசி மூலம் குறித்த வெளிநாட்டவர் செலுத்துவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

7ஆம் அறிவு திரைப்படச் சம்பவம்.. 

கொழும்பை அண்டிய கடற்கரைப் பகுதியொன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகமாக நாய்கள் குழுமியிருக்கும் கடற்கரையோரம் ஒன்றுக்குச் சென்ற வெளிநாட்டவர், தனது காற்சட்டைப் பையில் இருந்து மருந்தொன்றை எடுத்து அதனை ஊசி மூலம் நாய்களுக்குச் செலுத்துகின்றார்.

எனினும், குறித்த வெளிநாட்டவர் யார், ஏன் இவ்வாறு நாய்களுக்கு மருந்து செலுத்துகின்றார், அது என்ன மருந்து என்பது தொடர்பான எவ்வித தகவலும் வெளிவரவில்லை.   

எவ்வாறாயினும், 7ஆம்  அறிவு தமிழ்த் திரைப்படம் போன்று நாய்களுக்கு வைரஸ்களைப் பரப்பும் விச ஊசியினை அவர் செலுத்துவது  போன்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளவாசிகள் அங்கலாய்க்கின்றனர். 

   

 

NO COMMENTS

Exit mobile version