Home இலங்கை சமூகம் யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் அரச அதிபர் மகேசன் நியமனம்

யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் அரச அதிபர் மகேசன் நியமனம்

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை
உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும்,
முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன்
நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட
பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி
வறிதாக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

இதனைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு கணபதிப்பிள்ளை மகேசனை
நியமிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

உடனடியாகச் செயற்படும் வகையில் எதிர்வரும் 2028 மார்ச் நான்காம் திகதி வரையான
காலப்பகுதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழகச்
சட்டத்தின் 44(55)ஆம் பிரிவின் கீழான விதிகளுக்கு உட்பட்டதாகுமெனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version