Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

0

சிறிலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.

சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 1996 முதல் 1998 வரைக்கும் பின்னர் 2011 முதல் 2012 வரை இலங்கை கிரிக்கெட் தலைவராக பதவி வகித்தார்.

அவரது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

சமூக சேவையாளர்

கிரிக்கெட் நிர்வாகியாக மட்டுமன்றி, தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் உபாலி தர்மதாச அறியப்பட்டவர்.

இலங்கை விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சமூகத்தினர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/former-lanka-cricket-president-upali-passes-away-1785011005

NO COMMENTS

Exit mobile version