Home உலகம் சிந்து நதியில் தண்ணீர் ஓடாவிடின் இந்தியர்களின் இரத்தம் ஓடும் : பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை...

சிந்து நதியில் தண்ணீர் ஓடாவிடின் இந்தியர்களின் இரத்தம் ஓடும் : பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

0

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தியா(india), பாகிஸ்தான்(pakistan) இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜாதாரியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 நேற்று(25) வெள்ளிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் கடும் விமர்சனத்துடன் அவர் இந்தியாவை குற்றம் சாட்டினார்.

இந்தியர்களின் இரத்தம் ஓடும்

“சிந்து நதி என்பது பாகிஸ்தானுக்கே சொந்தமானது. நதி வழியாக நமது தண்ணீர் ஓட வேண்டும், இல்லையென்றால் இந்தியர்களின் இரத்தம் ஓடும்,” என அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பஹல்காம் தாக்குதலை மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காக இந்தியா பாகிஸ்தானை குறி வைக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

பாகிஸ்தான் அரசும் தனது பதிலடியாக இந்தியா உடனான அனைத்து வணிக நடவடிக்கைகளை நிறுத்தி, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கையும், சிந்து நதிநீரை தடுக்கும் முயற்சியாக இருந்தால், அதை “போர் நடவடிக்கை” என்று கருதி பதிலடி எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version