முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரே வாக்களிக்கத் தேவையில்லை என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் நடாளுமன்றத்தில் எனக்கு ஜனாதிபதியை சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பு
கிடைத்திருந்தது. அந்த சந்திப்பின்போது நடந்த சில விடயங்கள், ஒரு சில ஊடக
நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் மூலம் கேட்டு அறிந்து சிலர் செய்திகளை
வெளியிட்டு இருந்தார்கள்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
உண்மையில் இது தொடர்பாக வெளியிடுவதற்கு எந்த ஒரு
நிலைப்பாட்டிலும் நான் இருக்கவில்லை. ஏன் என்றால் அது ஒரு உத்தியோகபூர்வமான
சந்திப்பு இல்லை.
ஜனாதிபதியை எனக்கு கடந்த நடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில்
இருந்தவர் என்று தெரிந்தவர் என்பதன் அடிப்படையில் ஒரு சில விடயங்களை பற்றி
பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக கிடைத்ததே தவிர உத்தியோகபூர்வமான சந்திப்பு என்று
அதை நான் சொல்லாத அதனால் அது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிக்கையும் நான்
வெளியிடவில்லை.
இச்சந்திப்பில் முக்கியமாக மூன்று பிரதான விடயங்களை பற்றி பேசி இருந்தேன். முதலாவது மாகாண சபை தேர்தல்.
மாகாண சபை தேர்தலுக்கு தனிநபர் சட்டமூலம் ஒன்றினை நான் சமர்ப்பித்து
இருக்கின்றேன்.
தற்போது அது இரண்டாம் வாசிப்புக்கு தயாராகி இருக்கின்றது. அரசாங்கம் தன்னுடைய சிபாரிசை அனுப்புவதன் மூலம் மாத்திரம் தான் அந்த
சட்டமூலத்தை ஒரு சட்டமாக இயக்குவதற்கு இரண்டாம் வாசிப்புக்கு போவதற்கான தேவை
இருக்கின்றது.
விகிதாசார முறை
அந்தவகையில் நான் ஜனாதிபதி இடம் கேட்டு இருந்தேன். ரில்வின்
சில்வா, யாழ். மாவட்டத்தில் வைத்து எல்லை நிர்ணயம் செய்ததன் பிற்பாடு
தான் தேர்தலை நடத்தலாம் என கூறியிருந்தார்.
அத்தோடு ஐநாவுக்கு அனுப்பிய அறிக்கையிலும் கூட தேர்தல் முறையைப் பற்றி எல்லை
நிர்ணய ஆணைக் குழுவின் அறிக்கை எல்லை நிர்ணயம் செய்ததன் பிற்பாடுதான் மாகாண
சபை தேர்தல் நடத்தலாம் என்று சொன்னதாக இருந்தது. இந்த விடயம் தொடர்பாக
ஜனாதிபதியிடம் நான் தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என கேட்டிருந்தேன்.
ஜனாதிபதி அந்த நேரத்தில் எனக்கு கூறிய பதிலை பார்த்தபோது அவர் இந்த எல்லை
நிர்ணயம் செய்துதான் தேர்தல் நடத்துவதா? அல்லது விகிதாசார முறையில் தேர்தல்
நடத்துவதா? என்பதை பற்றி இன்னும் ஒரு முடிவே இல்லை என்பதை தான் அவர்
கூறியிருந்தார். அதற்கு நான் கேட்டிருந்தேன் ஐநாவில் இவ்வாறு
கூறியிருக்கின்றீர்கள் என்று கூறிய போது அவர் கூறினார்.
நாங்கள் தேர்தல் நடத்த
வேண்டும் என்று தான் ஐநாவுக்கு சொல்ல வேண்டுமே தவிர எல்லை நிர்ணயம் செய்தால்
அல்லது விகிதாசாரம் முறையில் செய்ய வேண்டுமா என நாங்கள் அவர்களுக்கு சொல்ல
வேண்டிய தேவை இல்லை கூறியிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
