Home இலங்கை அரசியல் சஜித்துடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான்

சஜித்துடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான்

0

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் (Tillakaratne Dilshan), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

சஜித்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

சுமார் 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய திலகரத்ன டில்ஷான், சிறிது காலம் அணியின் தலைவராகவும் கடமையாற்றினார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

2018 நவம்பரில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட தில்ஷான், 2015 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) தனது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன (Hashan Thilakaratne) மற்றும் அவரது மனைவி திருமதி அப்சரி திலகரத்ன ஆகியோரும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version