யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள இலவச கல்விக்கூடத்தின் விளம்பர பதாகையை இனந்தெரியாத நபர்கள் உடைத்தெறிந்துள்ளனர்.
கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தாய் நிலம் கல்விக்கூடத்தின் விளம்பர பதாகையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக இலவச கல்விக்கூடம் நடாத்தி வரும் வேளையில் இந்த கல்வி நிலையத்தில் பல மாணவர்கள் இலவசக் கல்வியை பயின்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இதேவேளை குறித்த கிராமத்தை சேர்ந்த சமுக ஆர்வலர் தனது தனிப்பட்ட பாவனையில் இருந்த பதாகையை கல்விக்கூடத்தின் விளம்பரத்திற்க்காக தந்துதவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பதாகையை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் நிலம் கல்விக்கூட நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
