Home இலங்கை சமூகம் உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரும் பணம்

உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரும் பணம்

0

இது வரை உர மானியம் பெறாத விவசாயிகளுக்கு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமைக்குள் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உர மானியம் 

இதுவரை 226,015 விவசாயிகளுக்கு பெரும் போக உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு உரமானியம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version