முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் :மாற்றப்பட்டது திட்டம்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களை நேரில் சந்தித்து தெளிவுபடுத்துவது அவசியமானதொன்று என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இலவச வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிதிநிகளுடன் ஆளுநர் செயலகத்தில் இன்று (3) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

 பயனாளர்களுக்கான இலவச வீடுகள்

சூரிய படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரிய படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் :மாற்றப்பட்டது திட்டம் | Free Housing Scheme North Governor Notification

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்படவிருந்த சூரிய படலங்களை ஒன்று சேர்த்து, அரச காணிகளில் சூரிய படல பூங்காக்களை நிர்மாணிக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

எனினும், தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளர்களுக்கான இலவச வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க

அதற்கமைய, இதுவரை 31 ஆயிரத்து 730 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை வெகு விரைவில் பூர்த்தி செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க  தமது நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இன்றைய கூட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் :மாற்றப்பட்டது திட்டம் | Free Housing Scheme North Governor Notification

இந்நிலையில் இறுதியாக நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நெடுந்தீவு மக்களையும் புதிய வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்குமாறு ஆளுநர் குறித்த நிறுவனத்திடம் கோரினார்.

அவர்களுக்கான சூரிய படலங்களை பொருத்துவதற்கு தேவையான காணிகளை ஒதுக்கி தருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டம்! ரணில் அதிரடி

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டம்! ரணில் அதிரடி

 கள ஆய்வு 

  இந்த வீடமைப்பு திட்டத்துடன் இணைந்ததாக பூநகரி குளத்திற்கு அருகில் சூரிய படல பூங்காக்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றாடல் தொடர்பான கள ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சூரிய படல திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் கூறியுள்ளது.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் :மாற்றப்பட்டது திட்டம் | Free Housing Scheme North Governor Notification

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய செயற்றிட்டம் தொடர்பில் பயன்பெறவுள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் கிராம மட்டத்தில் சந்திப்புக்களை ஏற்படுத்தி தெளிவுபடுத்த வேண்டும் என ஆளுநர் கூறினார்.

இதனூடாக புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் சந்தேகங்களை குறித்த நிறுவனம் தீர்க்க வேண்டும் என கூறிய ஆளுநர், மக்கள் சந்திப்புக்கு தேவையான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனுக்கு பணிப்புரை விடுத்தார்.
 
கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி : பின்னர் நடந்த விபரீதம்

கணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய மனைவி : பின்னர் நடந்த விபரீதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்