Home இலங்கை இலங்கைக்கான வெளிநாடொன்றின் குறைந்த கட்டண விமான சேவை!

இலங்கைக்கான வெளிநாடொன்றின் குறைந்த கட்டண விமான சேவை!

0

பிரான்சின் குறைந்த கட்டண நீண்ட தூர விமான நிறுவனமான பிரெஞ்ச் பீ (French Bee) பாரிஸ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைக்கும் புதிய விமானச் சேவையொன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

அரசாங்க அனுமதிகளுக்கு உட்பட்டு, 2026/27 ஆம் ஆண்டின் வட குளிர்காலப் பருவத்தில் இந்த விமான சேவை தொாடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, வரும் 2026 டிசம்பர் 19 ஆம் திகதி முதல் ஏர்பஸ் A350-900 ரக விமானங்களைப் பயன்படுத்தி, பாரிஸ் ஓர்லி (Paris Orly), மலே (Malé) மற்றும் கொழும்பு (Colombo) ஆகிய நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு இரண்டு முறை இந்த விமானச் சேவை இயக்கப்படவுள்ளது.

கூடுதல் பயண வாய்ப்புகள்

இந்த நிலையில், மேற்படி விமான சேவையானது பிரான்ஸ், மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் பயண வாய்ப்புகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள இந்த கால அட்டவணையின்படி, வரும் 2027 மார்ச் 10 ஆம் திகதி முதல் இந்த விமானச் சேவை வாரத்திற்கு ஒரு முறையாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/french-bee-planning-to-launch-a-new-service-1782127085

NO COMMENTS

Exit mobile version