Home இலங்கை சமூகம் யாழில் மீண்டும் எரிபொருள் வரிசை: ஈரான் – இஸ்ரேல் போரின் எதிரொலி

யாழில் மீண்டும் எரிபொருள் வரிசை: ஈரான் – இஸ்ரேல் போரின் எதிரொலி

0

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அதனால் ஏற்படும் நிலைமைக்கு அச்சமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

யாழ் நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் நிரப்பு நிலையங்களில், எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிகளவில் கூடிவருவதால், அந்தந்த நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய கிழக்கில் தொடரும் நிலவரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தையே பாதிக்கக்கூடியதாக இருப்பதால், மக்கள் முன்னேற்பாடாக எரிபொருள் சேமிப்பதற்குத் துணைகொள்கிறார்கள்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் தேவையான அளவில் எரிபொருள் இருப்பு உள்ளது. நிரப்பு நிலையங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.

செயற்கையாக தட்டுப்பாடு உருவாகும்படியாகச் செயல்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/y4phjKUCLyo

NO COMMENTS

Exit mobile version