Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் விலைக் குறைப்பு! அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்..

எரிபொருள் விலைக் குறைப்பு! அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்..

0

இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைப்பது தொடர்பில்  இந்த மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

மத்தியக் கிழக்கில் நிலவும் சூழலைப் பொறுத்து இந்த தீர்மானம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

எரிபொருள் விலை

உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலைகளில்  வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும், அதன் நிலைத்தன்மையைப் பொறுத்து எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போர்ச்சூழல் காரணமாக, அதிகரித்த எரிபொருள் விலையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் உள்ளிட்ட நிவாரணம் விரைவில் நிறைவடையவுள்ளது. 

இந்த நிலையில், எரிபொருள் விலையினை குறைப்பது தொடர்பான தீர்மானத்தை இம்மாத இறுதிக்குள் அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Source: https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1782007971

NO COMMENTS

Exit mobile version