இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று (4) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,குறித்த புதிய சூத்திரம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
எரிபொருள் பிரச்சினை
அத்தோடு, விநியோகஸ்தர்களின் பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்கும் வகையில், மீண்டும் ஒரு முறை 18ஆம் திகதி காலையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/fuel-supply-at-new-prices-nalinda-jayatissa-1741079985
