எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மறுத்துள்ளது.
நாடு முழுவதும் இன்று 1,581 ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலும் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
இன்றையதினம் ஓர்டர்கள் செய்யப்பட்டவை நாளைய தேவைகளுக்காக என்றும், விநியோகஸ்தர்கள் கூறுவது போல் நாளை எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட எந்த காரணமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் ஓகஸ்ட் மாதம் வரை ஏற்கனவே ஓர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் இருப்பு
மேலும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வேண்டுமானால், எரிபொருள் இருப்பு முடிக்கப்பட வேண்டும் அல்லது எரிபொருளை ஓர்டர்கள் செய்ய நாணயப் பிரச்சினை இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த சிக்கல்கள் எதுவும் தற்போது இல்லாததால் தங்களிடம் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் டி.ஜே. ராஜகருணா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/KbF77bENIiI