Home உலகம் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச் சடங்குகள் – LIVE

நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச் சடங்குகள் – LIVE

0

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்து 4 மாதங்களுக்குப் பிறகு நடைபெறுகின்றன.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையில் இருந்து எதிர்த்தாக்குதல் நடத்தியது.

இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது.

வான்வழித் தாக்குதல்

இதையடுத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்து 4 மாதங்களுக்குப் பிறகு இன்று (23.02.2025) அவருக்குரிய இறுதிச் சடங்கு நடைபெறுகின்றன.

ஹிஸ்புல்லா அமைப்பின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஷேக் அலி தமூச்இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு மக்களை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஷேக் அலி தமூச் விடுத்த வேண்டுகோளில் “நமது எதிர்ப்பு வலுவானது, போர்க்களத்தில் நமது எதிர்ப்பு நிலைத்திருக்கும், சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் அதை ஒருபோதும் நசுக்க முடியாது என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு வீடு, கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் மக்கள் பெருமளவில் வெளியே வந்து இதில் பங்கேற்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/ATsYcAkQylA

NO COMMENTS

Exit mobile version