Home இலங்கை கல்வி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான தகவல்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான தகவல்

0

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3,23,876 பரீட்சார்த்திகள் இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமிதா ஜயசுந்தர தெரித்துள்ளார்.

மேலும், இந்தாண்டு உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களம்

நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முடிவடையும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/g-c-e-al-exam-2014-update-grade-scholarship-exam-1723861258

NO COMMENTS

Exit mobile version