Home இலங்கை அரசியல் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: உடனடி தீர்வு கோரும் கஜேந்திரகுமார் எம்.பி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: உடனடி தீர்வு கோரும் கஜேந்திரகுமார் எம்.பி

0

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் உரிய நடவடிக்கைகளுக்குத் தாம் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(04.03.2025) அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் தலையீடுகள் இன்றி கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையாக செயற்பட முடியாத நிலையில் உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/4HIlH90Cl7s

NO COMMENTS

Exit mobile version