பாகிஸ்தான் (Pakistan) ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) , உடனடியாக அந்த பதவியை விட்டு விலகியுள்ளார்.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கும் கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளமையே காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 2024 இல், கிர்ஸ்டன் இரண்டு ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் ODI மற்றும் T20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
புதிய பயிற்சியாளர்
இந்த நிலையில், பாகிஸ்தானின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு ஒரு வாரத்திற்குள் அவர் பதவியை விட்டு விலகியுள்ளார்.
அதன் படி, வெற்றிடமான பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார்.