Home உலகம் காசாவில் தலைவிரித்தாடும் உணவுக்காக போர்: அபகரிக்கப்பட்ட நிவாரணம்

காசாவில் தலைவிரித்தாடும் உணவுக்காக போர்: அபகரிக்கப்பட்ட நிவாரணம்

0

காசாவில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை 500 மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவிற்கு அனுப்பப்படும் நிவாரண உதவிகளை சிலர் அபகரித்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக காசாவில் ஒரு கிலோ சீனி இலங்கை மதிப்பில் 17,000 ரூபாவிற்கு விற்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உலக நாடுகள்

காசாவிற்கு அனுப்பப்படும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்த இஸ்ரேல், உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து மார்ச் மாதம் முதல் மிகவும் சிறிய அளவிலான பொருட்களை உள்ளே அனுப்ப தொடங்கியிருந்தது.

இவ்வாறு சொற்ப அளவில் அனுப்பப்படும் பொருட்களை சிலர் அபகரித்து அதனை அதிக விலைக்கு காசாவில் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக மாஃபியா

இலங்கை ரூபாவின் படி, காசாவில் ஒரு லீற்றர் சமையல் எண்ணெய் 15,000 ரூபாய்க்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 7,000 ரூபாய்க்கும் ஒரு கோபி(Coffee) 6,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதலினால் இவ்வாறான வணிக மாஃபியாக்களினாலும் காசாவில் அவல நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version