முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பணய கைதிகளை விடுவித்தாலும் போரை நிறுத்த மாட்டோம்! அச்சத்தில் ஹமாஸ்

போர் நிறுத்தம் வேண்டுமென ஹமாஸ் அமைப்பினர் விடுத்த கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார்

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் திடீரென ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இதனால், வெகுண்டெழுந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் ஓய மாட்டோம் எனக் கூறி காசா மீது அதிரடி தாக்குதலை தொடங்கியது.

நான்கு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது.

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

தமிழர்களை விட சீனாவிற்கு முன்னுரிமை கொடுக்கும் மேற்கத்தேய நாடுகள்! கஜேந்திரகுமார் ஆதங்கம்

போர் நிறுத்தம்

இந்த போரால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் மத்தியஸ்தம் செய்ய முயன்று வருகின்றன.

குறிப்பாக போர் நிறுத்தம் கொண்டு வர கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அண்மையில் முன்வைத்தனர்.

பணய கைதிகளை விடுவித்தாலும் போரை நிறுத்த மாட்டோம்! அச்சத்தில் ஹமாஸ் | Gaza Updates Israels War News Hamas

இதன்படி, முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1,500 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்தியா! அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்தார் நிக்கி ஹேலி

அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்தியா! அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்தார் நிக்கி ஹேலி

கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

2-வது கட்டத்தில் ஆண் பிணைக் கைதிள் விடுவிக்கப்படுவார்கள். 3 ஆம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளார்.

பணய கைதிகளை விடுவித்தாலும் போரை நிறுத்த மாட்டோம்! அச்சத்தில் ஹமாஸ் | Gaza Updates Israels War News Hamas

ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை எனவும் அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்