Home இலங்கை கல்வி சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் – 9A சித்திகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் – 9A சித்திகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

0

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகிய நிலையில், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் 11 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின.

இதற்கமைய, பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://tamilwin.com/article/gce-ol-exam-results-in-sri-lanka-1781954827

NO COMMENTS

Exit mobile version