வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இன்றையதினம்(11) 2024ஆம் ஆண்டிற்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
10 மாணவிகள் 9ஏ சித்தி
அதற்கமைய,
வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில், 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பிரசாந்தன் ஹரனி, சிவரூபன் மகிழிசை, சிவனேஸ்வரன் சிபிக்கா, அஜந்தன் வர்ணிகா, அஜித்குமார் ஹரணியா, சுவேந்திரன் தன்சிகா, தவசீலன் கபிஸா, தவபாலன் அர்ச்சனா, வோல்டர் விதுசாலினி, துதர்சன் பேரேழில் ஆகிய மாணவிகளே 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
