Home இலங்கை சமூகம் போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்

போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்

0

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம்
செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர்

தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட தமது உப அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், மாணர்களின் நலன் பாதிக்கும் எனவும் குறித்த இடமாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி
குறித்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version