முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுகளை
அப்புறப்படுத்தியதாகக் கூறப்படும் சமூக ஊடக அறிக்கைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுன நிராகரித்துள்ளது.
எக்ஸ் பதிவொன்றில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு இந்தக்
கூற்றுக்கள் “முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை மற்றும் தவறான தகவல்களை
அடிப்படையாகக் கொண்டவை” என்று குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும், இது தவறான தகவல்களைப்
பரப்புவதற்கான முயற்சிகள் என்றும் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்கள்
பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி ராஜபக்சவின் குழு, பரிசுகளை
நிராகரித்ததாக பரவலாகப் பரப்பப்பட்ட பதிவுகளில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து
இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
