Home இலங்கை குற்றம் யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன்
கைதான பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்றையதினம் (26) 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

புனர்வாழ்வு

பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள்
பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 6
மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Source: https://tamilwin.com/article/girl-arrested-in-jaffna-law-and-order-1748364861

NO COMMENTS

Exit mobile version