Home சினிமா 10 நாட்களில் GOAT படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் GOAT படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

GOAT படம்

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பக்கம் இப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் கூறி வந்தாலும் கூட, வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

10 நாள் வசூல்

இந்த நிலையில், GOAT திரைப்படம் வெளிவந்து 10 நாட்களை கடந்துள்ளது. இந்த 10 நாட்களில் உலகளவில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/goat-movie-10-days-box-office-collection-1726368614

NO COMMENTS

Exit mobile version