Home இலங்கை அரசியல் துமிந்த திசாநாயக்க மீண்டும் சிறைச்சாலைக்கு

துமிந்த திசாநாயக்க மீண்டும் சிறைச்சாலைக்கு

0

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மீண்டும் மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

மீண்டும்  சிறைச்சாலைக்கு

மறுநாள் அவர் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர் சிகிச்சைக்காக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி, ஒரு சிறப்பு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் மெகசின் சிறைச்சாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் அளவுக்கு அவர் பாரதூரமான நோய்களால் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version