Home இலங்கை பொருளாதாரம் தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்

தங்கவிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்

0

இலங்கையில் இன்றைய தினம் (26.06.2026) தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று 3000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கத்தின் விலை

அதேபோல், நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2700 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 348,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,587 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/gold-rate-today-in-sri-lanka-1782456629

NO COMMENTS

Exit mobile version