Home சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த குட் பேட் அக்லி படத்தின் டீசர்.. எப்போது தெரியுமா?

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த குட் பேட் அக்லி படத்தின் டீசர்.. எப்போது தெரியுமா?

0

குட் பேட் அக்லி

நடிகர் அஜித்தின் ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

21 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் ஆட்டோகிராப்.. அடேங்கப்பா டிரெய்லரை பாருங்க

அஜித்தின் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், அஜித் நடிக்க வேண்டிய பகுதிகள் முடிந்து அவர் இல்லாத சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

எப்போது தெரியுமா? 

இந்நிலையில், இப்படம் குறித்து தற்போது ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது, குட் பேட் அக்லி படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது என்றும் அடுத்தடுத்து படத்தின் அப்டேட் வெளிவர உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version