Home சினிமா அஜித்தின் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கம்.. காரணம் இவர்தான்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

அஜித்தின் குட் பேட் அக்லீ ஓடிடியில் இருந்து நீக்கம்.. காரணம் இவர்தான்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

0

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கேங்ஸ்டர் ஆக இந்த படத்தில் நடித்து இருந்தார்.

நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் குட் பேட் அக்லீ கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. தியேட்டர் போலவே ஓடிடியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் அந்த படத்திற்கு கிடைத்தது.

இந்நிலையில் நெட்பிலிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லீ தற்போது திடீரென நீக்கப்பட்டு இருக்கிறது.

1.65 கோடி கொடுத்தும் பிக் பாஸ் வர மறுத்த விஷால் பட நடிகை! ‘என்னை பார்த்தால் அப்படி தெரியுதா’

இளையராஜா தான் காரணம்

குட் பேட் அக்லீ படத்தில் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த கூடாது என இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் அதை விசாரித்து பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதனால் தற்போது copyright பிரச்சனை காரணமாக நெட்பிலிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லீ நீக்கப்பட்டு இருக்கிறது.

அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version