Home இலங்கை சமூகம் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: குறைகிறது பேருந்து கட்டணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: குறைகிறது பேருந்து கட்டணம்

0

பேருந்து கட்டணத்தை எதிர்வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் 0.55% ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணமாக 27 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

 தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.   

மாதாந்த எரிபொருள் விலை 

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் 2.5% ஆல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும்
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கமைவாக எரிபொருள் விலை
அவதானிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

NO COMMENTS

Exit mobile version