உயர்தரப்பரீட்சை மூலம் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பீடங்களிலும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை துணைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
உயர்தரப்பரீட்சையின் முடிவு
அதன்படி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
