முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈஸ்டர் தாக்குதல்! விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்களின் பின்னர் அதிபரான கோட்டாபய ராஜபக்ச எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல் இழக்கச்செய்ததே என அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டிகைக் காலங்களில் சமூக வலைத்தளங்களுடாக மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகைக் காலங்களில் சமூக வலைத்தளங்களுடாக மோசடி: மக்களுக்கு எச்சரிக்கை!

மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து 

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்திற்கு சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என அருட்தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்! விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய | Gotabaya Bans Easter Sunday Attack Investigations

அத்துடன் ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனை செய்தால் மைத்திரிபால சிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்தார்.

மேலும் இந்த தாக்குதலின் சூத்திரதாரி கோட்டாபய ராஜபக்ச என்பது தெளிவான விடயம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்டைய நாடுகளை சீண்டும் இஸ்ரேல்! சிரியா மீது திடீர் தாக்குதல்: பலர் பலி

அண்டைய நாடுகளை சீண்டும் இஸ்ரேல்! சிரியா மீது திடீர் தாக்குதல்: பலர் பலி

பொருளாதார நெருக்கடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் எனவும்  தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்! விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய | Gotabaya Bans Easter Sunday Attack Investigations

அத்துடன் ஆட்சி மாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே

பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பு முறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும், அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி: இளைஞன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி: இளைஞன் ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்