Home இலங்கை சமூகம் அரச ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்பு குறித்து வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்பு குறித்து வெளியான தகவல்

0

அரச சேவைக்கான முறையான சம்பள கட்டமைப்பை நிறுவுவது குறித்த துணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த அறிக்கை தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தநிலையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் குழு 

துணைக் குழுவின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சியினால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் அதன் தலைவர் அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோது, ​​தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலான அரச சேவையை நிறைவு செய்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களான நபர்களுக்கு அவர்கள் முன்னர் பணியாற்றிய பதவி தொடர்பான ஓய்வூதியங்களை வழங்கவும் இங்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தனது அரசாங்க வேலையை விட்டுவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக மாறும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியத்திற்கு உரிமையற்றவர் என்பதால், இந்த விடயத்தை பரிசீலிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version