சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு வருகை தர உள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட
விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஏழாவது மீளாய்விற்காக வரும் பிரதிநிதிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் காலாவதியாகும் தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக, மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஏழாவது மீளாய்வும், 300 மில்லியன் டொலர் கடன் தவணையை வழங்குவதற்கான தீர்மானமும் அதன்போது மேற்கொள்ளப்படவுள்ளது.
மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தத்தையும் அவர்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அதன்படி, உள்நாட்டின் எதிர்ப்பு மற்றும் பொதுமக்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல், மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Source: https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621
