முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் அரச சேவைகள் முடங்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச சேவை துறைகளை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று (09.7.2024) செவ்வாய்க்கிழமை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இன்று ஆசிரியர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளம் உட்பட்ட கொடுப்பனவுகள்

இதன்படி, நாளை சுகவீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரச சேவைகள் முடங்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Government Sector Strike Salary Allowances Issues

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப சம்பளம் உட்பட்ட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாமை மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமையையும் முன்னிட்டே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அஞ்சல் சேவைகள், நில அளவைத் திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது முகாமைத்துவ உதவியாளர்கள், தபால் தொலைத்தொடர்பு சேவையினர்

மற்றும், சமூக சேவைகள் உத்தியோகத்தர், கால்நடை போதனாசிரியர்கள், அரச தாதியர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

பொதுமக்களுக்கு சுமை

பெறுமதி சேர் வரி

இந்நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் பெறுமதி சேர் வரி (VAT) தற்போதைய 18% இலிருந்து 20-21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன (Mahinda Siriwardana)தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கையானது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால் அதனை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை எனவும் மகிந்த சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.