யாழ்ப்பாணம் (Jaffna) – நாகர்கோவில் பகுதியில் அரசு பேருந்து இடை நடுவில் பழுதடைந்ததால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (22.11.2025) காலை பருத்தித்துறை நோக்கி 6 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்து நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது
இதனால், பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்,அரச அதிகாரிகள், ஏனைய தொழில் துறைகளுக்குச்
செல்லும் அதிகாரிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் இடை நடுவில்
தவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
[
]
யாழ் வடமராட்சி கிழக்கு
யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பயன்பாட்டில் இருக்கும் அரச பேருந்துகள்
அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால் உடனடியாக புதிய பேருந்தை
தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை
உரியவர்கள் செவி சாய்க்கவில்லை என்று மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
பழுதடைந்த அரச பேருந்துகளால் அவதிப்படும் வடமராட்சி கிழக்கு மக்களின் அவசர
கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடன் தீர்த்துத்தருமாறு வடமராட்சி கிழக்கு
மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
செய்தி – லின்ரன்
