Home இலங்கை கல்வி வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : சாதனை படைத்த 56000 மாணவர்கள்

வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : சாதனை படைத்த 56000 மாணவர்கள்

0

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர்,

இவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சையில் பங்கேற்றனர்.

அதன்படி, வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில், 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256

NO COMMENTS

Exit mobile version