Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை

0

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, குறித்த பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தத் தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2,723 பரீட்சை நிலையங்கள்

இக்காலப்பகுதியில், பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது பரப்புரை செய்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெறும் வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ குறிப்பிட்டு சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல், அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this

https://www.youtube.com/embed/45B71ZXyg78

Source: https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-tuition-classes-banned-1785898880

NO COMMENTS

Exit mobile version