ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.இதில் பரீட்சைக்குத் தோற்ற 294,089 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
உயர்தரப் பரீட்சை
இந்த நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை தொடங்கி செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு பரீட்சையில் மொத்தம் 372,310 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்கு வருவதற்கு முன்னதாக, தங்களது அனுமதி அட்டைகளில் கையொப்பங்களைச் சான்றளித்து எடுத்து வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
Source: https://ibctamil.com/article/grade-5-scholarship-results-date-1786264835
