தேசிய மக்கள் சக்தி(npp) தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்களை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் சுற்றுலா பிரதியமைச்சர் ருவன் ரணசிங்கவின்(Ruwan Ranasinghe) பிரத்தியேக செயலாளரினால் பெறப்பட்டு பதுளை(badulla) மாவட்டத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகதகவல் வெளியாகி இருந்தது
விலங்குகளுக்கு தேவையான புல்
விலங்குகளுக்கு தேவையான புல் இந்த வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறு அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகம் கோரியுள்ளது.