Home இந்தியா அமெரிக்காவில் அதிகாலைவேளை விடுதியில் பற்றிய தீ : இந்திய குடும்பம் பலியான துயரம்

அமெரிக்காவில் அதிகாலைவேளை விடுதியில் பற்றிய தீ : இந்திய குடும்பம் பலியான துயரம்

0

 அமெரிக்காவில் விடுதி ஒன்றில் இன்று(02) அதிகாலைவேளை பற்றிய தீவிபத்தினால் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் அவர்களது மகள் உயிரிந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நதியாத் பகுதியை சேர்ந்த ஹிதேஷ்பாய் சுதர். இவரது மனைவி ஹினா பென். இவர்களது மகளான இஷானி(20) ஆகிய மூவருமே உயிரிழந்தவர்களாவர்.

குளியறையில் பதுங்குமாறு தெரிவித்த விடுதி ஊழியர்கள்

தீ பற்றியவுடன் விடுதி ஊழியர்களிடம் உதவி கேட்டனர். அவர்களை குளியல் அறையில் சென்று பதுங்குவதுடன் தண்ணீரை திறந்துவிடும்படி கூறினர்.

அவர்களும் அங்கே பதுங்கினர்.

தீயை அணைத்த பிறகு மீட்புப்படையினர் அங்கு சென்ற போது, மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.இதனையறிந்த உறவினர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/gujarat-couple-daughter-killed-in-fire-ohio-motel-1783008224

NO COMMENTS

Exit mobile version