முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரானுக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்கா : அதிரடி காட்டிய அரபு நாடுகள்

நான்கு அரபு நாடுகள் தங்களின் வான் எல்லையில் அமெரிக்க (United States) விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கும், (Iran) அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் என்பது இருந்து வருகிறது. தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இன்னும் வலுத்துள்ளது.

ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா விரும்பாதது தான் இந்த மோதலுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஈரான் அணுஆயுதம் 

இதனால் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் விரும்புகிறார்.

ஈரானுக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்கா : அதிரடி காட்டிய அரபு நாடுகள் | Gulf States Refuse Launching Pad Us Attack Iran

ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்காவால் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதோடு அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று ஈரான் முடிவு செய்துள்ளது.

மேலும் ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க விமானங்கள்

அதோடு ஈரானை தாக்கும் வகையில் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் உள்ள படை தளங்களில் அமெரிக்க வீரர்களையும், போர் விமானங்களையும் குவிக்கிறது. 

ஈரானுக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்கா : அதிரடி காட்டிய அரபு நாடுகள் | Gulf States Refuse Launching Pad Us Attack Iran

இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் அமெரிக்க படை தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளது. இதன் காரணமாக விரைவில் அமெரிக்கா – ஈரான் இடையே கடும் மோதல் என்பது வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நான்கு அரபு நாடுகள் தங்களின் வான் எல்லையில் அமெரிக்கா விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல்

ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அமெரிக்கா காய்நகர்த்தி வரும் நிலையில், அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையையொட்டிய தங்களின் வான் எல்லையில் 2 நாட்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு ஸ்கெட்ச் போட்ட அமெரிக்கா : அதிரடி காட்டிய அரபு நாடுகள் | Gulf States Refuse Launching Pad Us Attack Iran

அதன்படி, அரபு நாடுகளான சவுதி அரேபியா (Saudi Arabia), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates), கத்தார் (Qatar), குவைத் (Kuwait) உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இந்த தடையை விதித்துள்ளன. 

இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதுடன்,ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்கா கூறிய நிலையில் தற்போது தற்காலிகமாக 2 நாட்கள் மட்டும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வரும் நாட்களில் இந்த தடை என்பது நீட்டிப்பு செய்யப்படலாம் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.youtube.com/embed/dBfNhzZi-AU

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.