மஹியங்கனை கெவால் 20 பகுதியில் இன்று மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.